தமிழ்நாடு

தொடர் மழை: வீடு இடிந்து 5 பேர் பலி

தொடர் மழை: வீடு இடிந்து 5 பேர் பலி

webteam

தொடர் மழை காரணமாக‌ கிருஷ்ணகிரி மாவட்டம் தண்டேகுப்பம் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தண்டேகுப்பம் கிராமத்தில் மூதாட்டி ராதா (65), இவரது மகள் புஷ்பா (35), பேரன்கள் வசந்த குமார் (15), பகவதி (13), பேத்தி முல்லை(8) ஆகியோர் குடிசையில் தூங்கிக் கொண்டு இருந்தனர். நேற்று மாலையிலிருந்து பெய்துவரும் தொடர் மழை காரணமாக இன்று அதிகாலை வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. அதில், சம்பவ இடத்திலேயே 2 சிறுவர்கள், 3 பெண்கள் உயிரிழந்தனர். 
தகவலறிந்து வந்த காவல், தீ‌ணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் இடிபாடுகளை அகற்றி, உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.