தமிழ்நாடு

தொடரும் காய்ச்சல் மரணங்கள்: 5 மாத கர்ப்பிணி உட்பட 5 பேர் உயிரிழப்பு

தொடரும் காய்ச்சல் மரணங்கள்: 5 மாத கர்ப்பிணி உட்பட 5 பேர் உயிரிழப்பு

webteam

தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்‌சல் பாதிப்பால் 5 மாத கர்ப்பிணி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராணி என்பவர் 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். திருவண்ணாமலை ஆரணியைச் சேர்ந்த அனிஷ்குமார்- சாந்தி தம்பதியின் 2 வயது குழந்தை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையிலும் காய்ச்சலுக்கு ஜெகதீஷ் என்ற குழந்தை இன்று உயிரிழந்தது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காயத்ரி என்ற 10 வயது சிறுமியும் உயிரிழந்தார். இன்று ஒரே நாளில் டெங்கு மற்றும் காய்ச்சலால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.