தமிழ்நாடு

மதுரையில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர் சிகிச்சை - அரசு மருத்துவமனை தகவல்

webteam

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதன் டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த பஞ்சவர்ணம், சித்ராவும், கே.புதூரைச் சேர்ந்த சுரேஷ்குமாரும் டெங்கு அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்த சுபஸ்ரீ, திருச்சுழியைச் சேர்ந்த நாகராஜன் ஆகியோரும் டெங்கு பாதிப்பிற்கான அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் 5 பேருக்கும் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், டெங்கு சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னையில் சிகிச்சை பெற்று இறந்து ஒரு சிறுமி உட்பட இரண்டு பேருக்கு டெங்கு அறிகுறி இருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமின்றி டெங்கு பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்து வருவதாகவும், காய்ச்சல் அறிகுறியுடன் பலர் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் பேசப்படுகிறது. டெங்கு பரவுவதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.