ஐந்து பைசா பிரியாணி முகநூல்
தமிழ்நாடு

ஐந்து பைசா நாணயத்துடன் வரும் 50 பேருக்கு சிக்கன் பிரியாணி; அலைமோதிய மக்கள் கூட்டம்!

நிஜாம் காலனியில் புதிதாக திறக்கப்படும் ஒரு பிரியாணி கடையின் நிர்வாகத்தினர், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ஐந்து பைசா நாணயத்துடன் வரும் 50 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்குவதாக விளம்பரம் செய்தது.

PT WEB

புதுக்கோட்டையில் பிரியாணி கடை திறப்பு விழா சலுகையாக, ஐந்து பைசாவுக்கு வழங்கப்பட்ட பிரியாணியை வாங்குவதற்காக, மக்கள் கூட்டம் முட்டிமோதியது.

நிஜாம் காலனியில் புதிதாக திறக்கப்படும் ஒரு பிரியாணி கடையின் நிர்வாகத்தினர், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ஐந்து பைசா நாணயத்துடன் வரும் 50 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்குவதாக விளம்பரம் செய்தது. இதனால் ஏராளமானோர் கடையின் முன் திரண்டு, ஐந்து பைசாவுக்கு பிரியாணியைக் கைப்பற்றுவதற்காக முண்டியடித்தனர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய கடைக்காரர்கள், 50 பேருக்கு டோக்கன் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு பிரியாணியை வழங்கினர்.