தூத்துக்குடியின் சிந்தாமணிக்கும் - மீரான்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், 8 பேர் பயணித்த ஆம்னி வேன் கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் மூவர் தப்பி கரையேறிய நிலையில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் வேனிலேயே சிக்கியிருந்தனர்.
தீயணைப்புத்துறையினர் 5 மணி நேரம் போராடி ஆம்னி வேனையும், அதில் சடலமாக இருந்த மோசஸ், வசந்தா, ரவி, ஹெத்சியா கிருபா ஆகியோரையும் மீட்டனர். பின்னர், கிணற்றிலிருந்து ஒன்றரை வயது குழந்தையையும் சடலமாக மீட்டனர்.
இதனிடையே சம்பவ இடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் பார்வையிட்டனர்.