தமிழ்நாடு

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா..! சென்னையில் கிடுகிடுவென உயரும் பாதிப்பு

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா..! சென்னையில் கிடுகிடுவென உயரும் பாதிப்பு

webteam

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்தை கடந்தது. பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ஓரே நாளில் 121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 27ஆம் தேதி 52 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்த நாளே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 2ஆயிரத்து 58ஆகியுள்ளது.

சென்னையில் 22ஆம் தேதி 15 பேர், 23ஆம் தேதி 27பேர், 24ஆம் தேதி 52 பேர் என கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. 25ஆம் தேதி 43ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28ஆம் தேதி‌ 103ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்தவண்ணமே உள்ளது.

கடந்த 20ஆம் தேதி சென்னையில் கொரோனா தொற்று இறுதியானவர்களின் எண்ணிக்கை 303லிருந்து தற்போது 673ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 27 குணமடைந்து வீடு திரும்ப தற்போது 902 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 25ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்போர் விகிதம் 1புள்ளி 2ஆக உள்ளது.

நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்தோர் விகிதமும் அதிகமாகவுள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து 54.8% பேர் குணமடைந்துள்ளனர். உலக நாடுகளை போல் தமிழகத்திலும் கொரோனாவால் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆயிரத்து 392ஆண்களும்,666 பெண்களும் இதுவரை பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிகம் பேர் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக உள்ளது. இது 32.7 சதவீதமாகும்.