தமிழக முதல்வர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளார். இது மாணவர்களுக்கு குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக அமைந்துள்ளது.
பொங்கல் பண்டிகை வருகின்ற 14-ம் தேதி போகிப்பண்டிகை முதல் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் என கொண்டாடப்படவிருக்கிறது. புத்தாடை அணிவது, சூரியன், மாடு என இயற்க்கைக்கு பொங்கல் வைப்பது, ஜல்லிக்கட்டு முதலிய பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவது என தமிழர்கள் பொங்கல் பண்டிகையை ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தசூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணிகள் செல்ல சிறப்பு பேருந்துகள், சிறுப்பு ரயில்கள் என அரசால் இயக்கப்படுகின்றன. பொங்கலை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்துவரும் நிலையில், பள்ளி மாணவர்களும் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.
பொதுவாக ஜனவரி 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை மட்டுமே அரசு விடுமுறை இருக்கும் நிலையில், தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் 5 நாட்கள் விடுமுறை அளித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். முதல்வர் அறிவுறுத்தலின் படி 14ஆம் தேதியான போகிப்பண்டிகை முதல் 18ஆம் தேதியான உழவர் திருநாள் மறுநாள் வரை மொத்தம் 5 நாட்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.