தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 5,236 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,72,251 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவாரமாக சென்னையில் ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை சென்னையில் தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 127 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 5,641 பேர் உயிரிழந்துள்ளனர்.