தமிழ்நாடு

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Sinekadhara

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி சரக டிஜிபி ஆனி விஜயா, காவல்துறை டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு ஐஜியாக உள்ள செந்தாமரைக் கண்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நிர்வாக டிஐஜியாக இருந்த அன்பு, வேலூர் சரக டிஐஜியாகவும், நலத்திட்ட ஐஜியாக இருந்துவரும் சுமித்சரண், ரயிலே ஐஜியாகவும், சேலம் மாநகர காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா, திருப்பூர் காவல் ஆணையராக வனிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திருச்சி சரஜ டிஐஜியாக ராதிகா, திண்டுக்கல் சரக டிஐஜியாக விஜயகுமாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.