தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,373 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றால் மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 36 பேரும், தனியார் மருத்துவமனையில் 13 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 40 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 625 பேர் இறந்துள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 501 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய உயிரிழப்பில் 7 பேருக்கு எவ்வித இணை நோய்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணை நோய்கள் இல்லாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.