தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 49 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 49 பேர் உயிரிழப்பு

webteam

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு உயிரிழந்த 49 பேர் குறித்த தகவல்களை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று ஒரே நாளில் 1515 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல், அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொரோனா நோய் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்ட போதும், அதிகபட்சமாக 49 பேரின் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்று வெளியாகியுள்ளது. நேற்று 44 பேரின் உயிரிழப்பு குறித்து தகவல் வெளியாகியிருந்தது. இதுவரை கொரோனாவுக்கு 528 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று வெளியாகியுள்ள தகவலில் அரசு மருத்துவமனையில் 35 பேரும், தனியார் மருத்துவமனையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ளவர்களில் இருவர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். இணை நோய்கள் எதுவும் இல்லாமல் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.