48 ஆவது புத்தகக் காட்சி - முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழிவிருது பெறுவோர் பட்டியல் வெளியீடு. இதில் பபாசி விருது பெறுவோர் பெயர்களும் அறிவிக்கப்பட்டதுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 48 ஆவது புத்தகக் காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 27 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகக் கண்காட்சியின் போது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருது வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், விருதாளர்களின் பெயர்களை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் முருகன் உள்ளிட்டோர் அறிவித்தனர்.
நந்தனம் ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை 27ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றுகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை ஆற்றுகிறார்.
துவக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்கள்...
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழிவிருது 6 பேருக்கு வழங்கப்படுகிறது...
1.) பேராசிரியர் அருணன் உரைநடை..
2.) நெல்லை ஜெயந்தா – கவிதை..
3.) சுரேஷ் குமார இந்திரஜித் – நாவல்...
4.) என். ஸ்ரீராம் – சிறுகதைகள்
5.) கலைராணி – நாடகம்
6.) நிர்மால்யா – மொழிபெயர்ப்பு...
ஆகிய 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழிவிருது 6 பேருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் பபாசி சார்பில் விருது பெறுவோர்...
சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கருணாநிதி விருது கற்பகம் புத்தகாலயம்...
சிறந்த நூலகருக்கான விருது Dr. R.கோதண்டராமன் அவர்கள்...
சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது பெல் கோ.
சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருது - எழுத்தாளர் ஜோதி சுந்தரேசன் அவர்கள்...
சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது - முனைவர் சபா.அருணாச்சலம் அவர்கள்...
சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது - பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள்.
சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது எழுத்தாளர் சங்கர சரவணன் அவர்கள்.
முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தார் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது - மணவை பொன்.மாணிக்கம் அவர்கள்.
சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது - மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஒரு கோடி ரூபாய் வழங்கியிருந்தார்.
அது அப்படியே உள்ளது அதிலிருந்து வரும் வட்டியை நாங்கள் ஆண்டுதோறும் ஆறு லட்சம் வீதம் பொற்கிழியாக வழங்கி வருகிறோம்.
இந்த ஆண்டு புதிய முயற்சியாக ஜனவரி 3-ஆம் தேதி 1330 குறள்களையும் பொருள் உணர்ந்து ஒப்பிடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 1330 மாணவர்கள் கலந்து கொண்டு பொருள் புரிந்து படிக்கவும் பதாகைகள் இயங்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரலையும் எழுதி ஏந்தி ஒவ்வொரு குரலாக மேடையில் மாணவர்கள் சொல்லுவார்கள்.
கடந்த ஆண்டு மழையால் ஒரு சில அரங்குகள் பாதிக்கப்பட்டன புத்தகங்களிலும் பாதிப்பு இருந்தது. உறுப்பினர் அல்லாத 250 பேர் வரை அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் குவிக்கப்பட உள்ளது. அதிகப்படியாக மொழிபெயர்ப்பு நூல்கள் வர உள்ளன.
உறுப்பினர்கள் பலருக்கு இந்த முறை நிராகரிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் அரங்குகள் கொடுக்க வேண்டி இருப்பதால் அவர்களுக்கு கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அதை புரிய வைத்து அரங்குகளை குறைத்து புதிய பதிப்பாளர்களுக்கு அரங்குகளை கொடுத்திருக்கிறோம்.
மினி ராக் சிஸ்டம் குறைவான புத்தகங்கள் வைத்து விற்பனை செய்பவர்களுக்கு வைக்கப்படுகிறது அதுவும் நல்ல வரவேற்பு உள்ளது அதுவும் இந்த ஆண்டு இருக்கும். ஒரு சிலர் பெரிய அரங்குகள் கேட்டார்கள் அவர்களுக்கு பிரத்தியேகமாக அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பென்குயின் போன்ற சர்வதேச பதிப்பகங்கள் கூடுதல் அரங்குகள் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு மழை பாதிப்பு இருந்ததால் அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இந்த ஆண்டு இன்னும் கூடுதல் கவனத்தோடு அரங்குகளை பாதுகாப்பாக ஏற்படுத்தியிருக்கிறோம்.
பிரெய்லி புத்தகங்கள் இருப்பதற்கான அரங்கு வாடகை இல்லாமல் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் இந்த ஆண்டு இரண்டு அரங்குகள் கேட்டிருந்தார்கள் அவர்கள் வாடகையும் கொடுத்திருக்கிறார்கள் அவர்களுக்கு அது ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.