தமிழ்நாடு

பழனியில் வறட்சியால் 45% பயிர்கள் பாதிப்பு

பழனியில் வறட்சியால் 45% பயிர்கள் பாதிப்பு

Rasus

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வறட்சியால் 45 சதவீத பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

பழனி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள 5 இடங்களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இன்று ஆய்வு மேற்கொண்டது. அதில், பருவமழை பொய்த்ததால் பழனியில் மட்டும் 45 சதவீத பயிர்கள் கருகி, விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் அறிக்கை அடுத்த வாரத்தில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். வறட்சியால் விவசாயிகள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து புதிய தலைமுறை தொடர்ந்து நேரலையாக செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில் பழனியில் அமைச்சர், தலைமைச்செயலக அதிகாரி மங்கத்ராம் சர்மா கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.