சசிகலா மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கு 10% கீழான ஆதரவு கிடைத்துள்ளது என்பது புதிய தலைமுறை கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் சசிகலா மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு,
முழுமையாக ஆதரிக்கிறேன் - 2.25%
ஆதரிக்கிறேன் - 7.20 %
ஆதரிக்கவில்லை - 45.64%
எதிர்க்கிறேன் - 27.45%
வேறு கருத்து - 4.32%
தெரியாது / சொல்ல இயலாது - 13.15% எனத் தெரிவித்துள்ளனர்.