தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் தற்போது வரை பெய்ய வேண்டிய மழையின் அளவு 23 செண்டி மீட்டர். ஆனால் தற்போது பெய்துள்ளது, 33 சென்டிமீட்டர். இது இயல்பைவிட 43 சதவிகிதம் அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் சென்னையில் இயல்பு அளவு 38 செமீ. ஆனால் பெய்துள்ளது 48 செமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இயல்பை விட 26 % அதிகம். கடந்த வாரம் வரை இயல்பை விட குறைவாக மழை பதிவாகி இருந்த நிலையில், இந்த வாரத்தில் நிலைமை மாறியுள்ளது.
தொடர்புடைய செய்தி: சென்னையில் தொடர்ந்து 12 மணி நேரமாக கொட்டித்தீர்க்கும் மழை; வீடுகளுக்குள் புகுந்த நீர்