தமிழ்நாடு

சுகாதாரத்தில் சிறந்து விளங்கிய 40 அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டு

சுகாதாரத்தில் சிறந்து விளங்கிய 40 அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டு

webteam

விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரத்தில் சிறந்து விளங்கிய 40 அரசு பள்ளிகளுக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை அதிகரிப்பதன் அவசியம் குறித்து ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பாக ஆண்டுதோறும் பாராட்டு சான்று சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சுகாதரத்தில் சிறந்து விளங்கிய 40 அரசு பள்ளிகளுக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

அரசு பள்ளிகளில் சுகாதாரம் குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புண்ர்வு ஏற்படுத்தி ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பாக ஆண்டுதோறும் பாராட்டு சான்று சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட 40 பள்ளிகளுக்கு ஆட்சியர் சிவஞானம் சுகாதாரத்தில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.