தமிழ்நாடு

"என் ஆப்ரேஷனுக்கு காசு இல்ல.. முதல்வர்தான் காப்பாத்தணும்”- 4 வயது சிறுவன் உருக்கமான வீடியோ

webteam

“அம்மா அப்பாட்ட காசு இல்லை, முதல்வர் ஸ்டாலின் அய்யா தான் காப்பாத்தணும்" என சிறுவனொருவன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் - சரண்யா தம்பதியரின் மகன் கஜன் (4). இந்த சிறுவனுக்கு, இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும் ரத்த மாற்று குழாயில் பிரச்னை உள்ளன. இதையடுத்து இந்த சிறுவனுக்கு ஐந்து வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், ஏற்கெனவே செய்யப்பட்ட இதயத்துளை அடைப்பு அறுவை சிகிச்சைக்கேவும் தாங்கள் வைத்திருந்த பணத்தை முழுமையாக செலவிட்டுவிட்டதாக சிறுவனின் பெற்றோர் கூறுகின்றனர். தற்போது முழுமையான அறுவை சிகிச்சை செய்ய ரூ.7 லட்சம் தேவைப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் பண வசதி இல்லாத நிலையில் அந்தச் சிறுவனே அதுகுறித்து வீடியோவில் பேசியுள்ளார். இது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சிறுவன், “என் பெயர் கஜன். பெருநாழியில் இருக்கேன். ஸ்டாலின் ஐயா காப்பாத்தணும். அம்மா அப்பாட்ட காசு இல்லை. எனக்கு ஆபரேஷன் பண்ணுவதற்கு காசு இல்ல. முதல்வர் ஐயா ஸ்டாலின் ஐயா தான் காப்பாத்தணும்” மழலை மொழியில் தனது இரு கைகளை கும்பிட்டவாரு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளான். மழலை சிறுவனின் இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.