தமிழ்நாடு

பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு

பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு

webteam

திண்டிவனத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்தார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் புவனேஷ் (4) சந்தை மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். நேற்று முன் தினம் தனது வீட்டின் அருகில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, காலில் பாம்பு கடித்ததாக தெரிகிறது. இதனால் சிறுவன் வலியால் துடித்துள்ளார். உடனே சிறுவனை மீட்ட பெற்றோர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

மருத்துவர்கள் பாம்பு கடித்தது தெரியாமல் கால்வலி என்று மருத்துவம் பார்த்துள்ளனர். சிறுவனின் நிலைமை மோசமடைந்ததால், மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். புவனேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தங்கள் மகனுக்கு சரியான மருத்துவம் பார்க்கப்படவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.