திருச்சியில் அருகே மூன்று கார்கள் மோதிக்கொண்டதில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே செவந்தம்பட்டியில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். கார்களில் சிக்கி உள்ளவர்களை துவரங்குறிச்சி போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.