தமிழ்நாடு

போலி மாதாந்திர பாஸ்: பேருந்து ஊழியர்கள் 4 பேர் தற்காலிக பணி நீக்கம்

போலி மாதாந்திர பாஸ்: பேருந்து ஊழியர்கள் 4 பேர் தற்காலிக பணி நீக்கம்

webteam

சென்னையில் போலி மாதாந்திர பஸ் பாஸ் தயாரித்ததாகக் கைது செய்யப்பட்ட மாநகர பேருந்து ஊழியர்கள் 4 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போலி மாதாந்திர பஸ்பாஸ் தயாரித்ததாக கிருஷ்ணகுமார், ஜெகதீஷ், பிரகாஷ், சுரேஷ்குமார் ஆகிய நான்கு பேர் சிக்கினர். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட இவர்கள் நான்கு பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது போக்குவரத்துக் கழகம் துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது.

போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி கிருஷ்ணகுமார், ஜெகதீஷ், பிரகாஷ், சுரேஷ்குமார் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம்‌ தெரிவித்துள்ளது. 

அதன்படி அவர்கள் நான்கு பேரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து பேருந்து பணிமனையிலும் தொடர் ஆய்வு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும், இந்த புகாரில் மற்ற ஊழியர்கள் தொடர்பில் இருந்திருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.