தமிழ்நாடு

வேலூரிலிருந்து வியாபாரிகள் சார்பில் 4 டன் காய்கறிகள்

வேலூரிலிருந்து வியாபாரிகள் சார்பில் 4 டன் காய்கறிகள்

webteam

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணமாக வேலூரில் இருந்து வியாபாரிகள் சார்பில் 4 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ‘கஜா’ புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் வேலூர் வியாபாரிகள் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 டன் காய்கறிகளை நிவாரணப் பொருட்கள் அனுப்பியுள்ளார்.
 
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் சார்பில் சுமார் 80 ஆயிரம் மதிப்பிலான 4 டன் காய்கறிகள், 100 போர்வைகள் ஆகியவை புயால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள மக்களுக்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நிவாரணப் பொருட்களை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்போம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.