காலை உணவு சாப்பிட்ட 4 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் pt desk
தமிழ்நாடு

தாராபுரம் | சாம்பாரில் கிடந்த பல்லி – காலை உணவு சாப்பிட்ட 4 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

தாராபுரம் அருகே நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாம்பாரில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட நான்கு மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

PT WEB

செய்தியாளர்: சரவணகுமார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எட்டாவது வார்டு கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மொத்தம் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர் இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர், இவர்களுக்கான காலை உணவு ஒப்பந்ததாரர் ஒருவர் மூலம் காங்கேயத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது

இந்நிலையில், இன்று காலை 40 மாணவர்கள் உணவருந்த தயாராகி உள்ளனர் இவர்களில் முதல் கட்டமாக உணவருந்திய ஒரு மாணவருக்கு அவரது உணவில் ஊற்றப்பட்ட சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி கிடந்துள்ளது. உணவினை அருந்திய மாணவர்களில் 4 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பள்ளியிலேயே மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக நான்கு பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்,

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உட்பட அரசு ம மருத்துவர்கள் பலரும் அங்கு வந்து மாணவர்களின் உடல் பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.