தமிழ்நாடு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

webteam

கொடைரோடு ரயில் நிலையம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையம் அருகே‌ 4 பேர் உடல் சிதறி உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு‌ ‌வந்த ரயில்வே கா‌வல் துறையினர், உடல்களை கைப்பற்றிய பின் நிகழ்விடத்தில்‌ ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஆதார் மற்றும் டைரி ஒன்று கிடைத்தது. 

அதிலிருந்த தகவல்களின்படி இவர்கள் திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த உத்தரபாரதி, சங்கீதா, அபினயஸீ, ஆகாஸ் என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் என தெரியவந்துள்ளது. எனினும் அதிகாலை நேரத்தில் நடந்த விபத்தால் உடல்கள் சிதறி முகம் சிதைந்துள்ளதால் ஆதார் கார்டில் உள்ளவர்கள் இவர்கள் தானா என்பதை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் அவர்களில் ஒருவர் பாக்கெட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து கொடைரோடு ரயில் நிலையத்திற்கு எடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் மற்றும் கொடைரோட்டில் இருந்து கொடைக்கானலுக்கு சென்ற பஸ் டிக்கெட்டுகள் இருந்து உள்ளது. இதனை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.