தமிழ்நாடு

தொட்டில் தாலாட்டே இறுதியான சோகம்: 4 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

தொட்டில் தாலாட்டே இறுதியான சோகம்: 4 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Rasus

சென்னை மதுரவாயலில் தொட்டில் ஆட்டும்போது 4 மாத கைக்குழந்தை தலையில் அடிபட்டு ‌உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

மதுரவாயலைச் சேர்ந்த பிரபு- பவானி தம்பதிக்கு 4 வயது மகளும், பிரகதீஸ்வரன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த 22-ஆம் தேதி குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்த பவானி, குழந்தை அழுததால் தொட்டிலை ஆட்டியுள்ளார். இதில் குழந்தையின் தலை அருகில் இருந்த கட்டிலில் மோதி குழந்தைக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் 23-ஆம் தேதி குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரகதீஸ்வரன்‌ மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை பிரகதீஸ்வரன் உயிரிழந்தான். தொட்டில் தாலாட்டே குழந்தை இறப்பிற்கு காரணமான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.