கோவை சோமனூரில் பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை இடிந்த விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கூரை இடிந்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், இறந்தவர்ளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி , மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் அதிக காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.