தமிழ்நாடு

கேரளாவில் நிகழ்ந்த விபத்தில் கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி

கேரளாவில் நிகழ்ந்த விபத்தில் கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி

webteam

கேரளா அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கோவையைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையைச் சேர்ந்த 12 பேர் ஆம்னி வேனில் கேரளாவுக்குச் சென்றுள்ளனர். பாலக்காடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி, ஆம்னி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் வந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.