தமிழ்நாடு

லாரி மீது கார் மோதி விபத்து : 4 பேர் பலி 

லாரி மீது கார் மோதி விபத்து : 4 பேர் பலி 

webteam

கோவை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

கேரள மாநிலத்தை சேர்ந்த அப்துல் பசீர் என்பவர் தன்னிடம் வேலை செய்யும் ஒரு பெண் உட்பட 4 பேரை அழைத்து கொண்டு நேற்று இரவு கன்னியாக்குமரிக்கு காரில் பயணம் செய்துள்ளார். அப்துல் பசீர் காரை ஓட்டியுள்ளார். 

கோவையை நோக்கி பயணம் செய்த போது இன்று அதிகாலை கோவை பைபாஸ் சாலையில் சூலூர் அருகே வெல்லூர் பிரிவு எனும் இடத்தில் எதிரே பழைய பேப்பர்களை ஏற்றி வந்த லாரியின் மீது பசீர் ஓட்டிவந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்திருந்தனர். 

தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதில் இரண்டு பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். மொத்தம் இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். பசீருடன் வந்த 4 பேர் குறித்து இன்னும் சரியான தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.