தமிழ்நாடு

4 தொகுதிகள் இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு

webteam

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. 

தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. 4 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் சூலூர் சட்டமன்ற தொகுதியை தவிர மற்ற மூன்று தொகுதிகளிலும் மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கினர். 

சுயேச்சைகள் பலரும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். பிரதான கட்சிகளாக திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு மே 19ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.