தமிழ்நாடு

ஓடும் ரயிலில் ஏறி வழிப்பறி செய்த 4 பேர் கைது

ஓடும் ரயிலில் ஏறி வழிப்பறி செய்த 4 பேர் கைது

webteam

சென்னையில் ஓடும் ரயிலில் பயணிகளிடம் கத்தியை காட்டி நகை பறித்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த 20ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விரைவு ரயில், திருவொற்றியூர் அருகே மெதுவாக செல்லும்போது ரயிலில் ஏறிய 4 பேர் கொண்ட கும்பல் பயணிகளிடம் நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடியது. இது தொடர்பான புகாரின் பெயரில் மூன்று தனி பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நான்கு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஜெய்ப்பூர் ரயிலில் பயணிகளிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கும்முடிபூண்டியைச் சேர்ந்த அருண் என்கிற அருண் ராஜ், மோகனசந்த், ராஜா, சரண் என்கிற விக்கி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 சவரன் நகை, வைர மோதிரம், ஆயுதம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.