தமிழ்நாடு

வனவிலங்குகளை வேட்டையாடி யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது

வனவிலங்குகளை வேட்டையாடி யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது

webteam

அரியலூர் அருகே வனவிலங்கை வேட்டையாடி யூ டியூப் சேனலில் வெளியிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அரியலூர் மாவட்டம் நாச்சியார் பேட்டை பகுதியைச் சோ்ந்த கார்த்திக், சுப்ரமணி, அலெக்ஸ் பாண்டியன், அண்ணாதுரை ஆகியோர்  வனவிலங்குகளை வேட்டையாடியதோடு, அது தொடர்பாக யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவில், திகில் படம் போல் வனவிலங்களை வேட்டையாடி அங்கேயே சமைத்து சாப்பிட்டு காட்டியுள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினா் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் முயல், புனுகு பூனை, உடும்பு, கெளதாரி, புறா உள்ளிட்ட பல வனவிலங்குகளை வேட்டையாடி சேனலில் போட்டு மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளனர். இவர்களிடம் இருந்து 2 பைக், 4 செல் போன், நவீன ரக ஆப்பிள் கணினி மற்றும் கேமிரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.