தமிழ்நாடு

4.2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வருகை

4.2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வருகை

Sinekadhara

தமிழகத்துக்கு 4.2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதனால் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் புனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன. சென்னைக்கு வந்த தடுப்பூசிகளை உடனே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்திலிருந்து டிஎம்எஸ் வளாகத்துக்கு தடுப்பூசிகள் கொண்டுசெல்லப்படும். பின்பு அங்கிருந்து மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்.