தமிழ்நாடு

3-வது போக்சோ வழக்கு: சிவசங்கர் பாபாவுக்கு 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

3-வது போக்சோ வழக்கு: சிவசங்கர் பாபாவுக்கு 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

kaleelrahman

சிவசங்கர் பாபா மீது போடப்பட்டுள்ள மூன்றாவது போக்சோ வழக்கில் வரும் 16-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் இயங்கி வந்த சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் வந்த நிலையில், புகாரை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவர் மீது ஏற்கெனவே இரண்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மேலும் ஒரு போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா-வை சிபிசிஐடி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து வரும் 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 16-ஆம் தேதி மீண்டும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.