சென்னையில் இருவேறு இடங்களில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 380 கிலோ குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கம் பகுதியில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பத்தப்பட்ட இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டில் இருந்த 300 கிலோ போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். இங்கிருந்து போதை பொருட்களை பல்வேறு கடைகளுக்கு விநியோகம் செய்து வந்த நித்யானந்தம், சரவணனை கைது செய்தனர்.
இதேபோல் நீலாங்கரை பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ ஒன்றை சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில் இருந்த 2 குட்கா மூட்டைகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 கிலோ போதை பொருள்கல் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.