தமிழ்நாடு

36 மாணவர்களும் விடுதலை: முதலமைச்சர் அறிவிப்பு

36 மாணவர்களும் விடுதலை: முதலமைச்சர் அறிவிப்பு

webteam

ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக கைதான 36 மாணவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் கடைசி நாளான ஜன.23ம் தேதி வன்முறையில் முடிந்தது. இது தொடர்பாக சென்னையில் 21 மாணவர்களும், மற்ற மாவட்டங்களில் 15 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றார். அந்த ஆணையம் 3 மாதத்திற்குள் தனது விசாரணையை தாக்கல் செய்யும் என்றும் வன்முறையின் போது கைதான 36 மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

மேலும், வன்முறையில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் நவீன முறையில் மீன் விற்பனை சந்தை அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.