தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,971இல் இருந்து 3,592ஆக குறைந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் 1,10,346 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் இன்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,592ஆக உள்ளது. சென்னையில் நேற்று 742 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 663ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 9 பேரும், அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,862ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 77,607 லிருந்து 66,992ஆக குறைந்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 14,182 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 33,23,214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 726ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 654ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டில் 334ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 290ஆக குறைந்தது. திருப்பூரில் 245ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 221ஆக குறைந்தது.