பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 3 இடங்களில் ரூ 335 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
142 கோடி ரூபாய் செலவில் கணேசபுரம் சுரங்கப்பாதைக்கு மேல் புதிய மேம்பாலம். 62 கோடி ரூபாய் செலவில் கொன்னூர் நெடுஞ்சாலை-ஸ்ட்ராஹன்ஸ் சாலை சந்திப்பில் புதிய மேம்பாலம். 131 கோடி ரூபாய் செலவில் தெற்கு உஸ்மான் சாலை-சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலை இடையே புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளன. இவற்றிற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் எனவும். இப்பணிகள் முடிவுற்றால் மாநகரின் மேற்குறிப்பிட்ட 3 முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.