தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி

webteam

பிளஸ் 2 தேர்வில் 34 சிறைக் கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 

மாணவர்களை விட 5.07 சதவிகிதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 95.37 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 95.23 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 95.15 சதவிகிதம் பேரும் கோவை 95.01 சதவிகிதம் பேரும் நாமக்கலில் 94.97 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து தேர்வு எழுதிய கைதிகள் 34 பேரும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.