கடலூர் மாவட்டத்தில் 300 ஆண்டுகள் பழமையான காசிவிஸ்வநாதர் கோவிலின் சிலைகளை, அறநிலையத்துறையினர் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.
கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நடராஜர், முருகன்,வள்ளி, உள்ளிட்ட 26 ஐம்பொன் சிலைகள் உள்ளன. தொடர்ந்து சிலை திருட்டு சம்பவங்கள் நடந்துவருவதினால் பாதுகாப்பு மையத்தில் வைக்க நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டன. திருவிழா நேரங்களில் அறநிலையத்துறையினர் அணுகி சிலையைப் பெற்றுக் கொள்ளலாம் என அறநிலைத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.