தமிழ்நாடு

300 வருடங்கள் பழமையான கரிகிரி கூஜா : அசந்துபோன மக்கள்

webteam

காஞ்சிபுரம் அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ள 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய வகை தண்ணீர் கூஜா பார்வையாள‌ர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

காஞ்சிபுரம் அருங்காட்சியகத்தில் களி மண்ணால் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டது போல கூஜா ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூஜாவின் மேல் பகுதி வழியே தண்ணீர ஊற்ற முடியாது. இதன் அடிப்பாகத்தின் வழியே தண்ணீர் ஊற்றும்படியாக இந்தக் கூஜா அமைந்துள்ளது.‌ கூஜாவை கவிழ்த்து தண்ணீரை ஊற்றினால் தண்ணீர் உள்ளே செல்லும் நிலையில், கூஜாவை நிமிர்த்திவிட்டால் ஒரு‌சொட்டு தண்ணீர் கூட வெளியே வருவதில்லை. அத்தகைய நுண்ணிய வேலைப்பாடுடன் இந்தக் கூஜா உருவ‌க்கப்பட்டுள்ளது. 

கரிகிரி கூஜா என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த வகையான கூஜாக்களை, கடைசியாக வேலூர் மாவட்டம் கரிகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்களே உருவாக்கியுள்ளனர். இதனை கடைசியாக செய்து கொடுத்த பொன்னுசாமி உடையார் என்பவர் சில ஆண்டுகளுக்கு‌ முன் இறந்தநிலையில், இந்தக் கூஜா‌ செய்வதற்கான தொழில்நுட்பமும் அவருடன் முடிந்துவிட்டது என்கிறார்கள் காஞ்சிபுரம் அருங்காட்சியத்தினர்.