தமிழ்நாடு

3 ஆண்டுகளாக செயல்படாத அரசு சேவை மையம்

3 ஆண்டுகளாக செயல்படாத அரசு சேவை மையம்

webteam

விருதுநகரில் 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள ஊராட்சி சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் அருகே வில்லிபத்திரி கிராமத்தில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டடம் சுமார் 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. சேவை மையம் பூட்டியே உள்ளதால், சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விருதுநகருக்கு செல்ல வேண்டியுள்ளதாக கிராம மக்கள் ஆதங்கப்படுகின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.14.55 லட்சம் மதிப்பில் ஊராட்சி சேவை மையம் கட்டப்பட்டது. கட்டுமானம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அது மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படவில்லை. அதனால், வில்லிபத்திரி, கெப்லிங்கம்பட்டி உள்ளிட்ட 10க்கும் அதிகமான கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் கட்டடத்தை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.