சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே 3 வயது பெண் குழந்தையை கடத்திய நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டையில் வசித்து வரும் தம்பதியான ஆண்டனி சார்லஸ்- மீரா, அவர்களது குழந்தை பெர்லின் பிரின்சி ஆகிய மூவரும் கிருஸ்தவ ஆலயத்திற்கு நேற்று சென்றுள்ளனர். தேவாலயத்தில் இருவரும் வழிபட்டுக் கொண்டிருந்தபோது தேவாலயத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை காணாமல் போனதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் தேவாலயத்தில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிந்த காட்சிகளை பார்த்தபோது, பெண் ஒருவர் தனது புடவையில் மறைத்து குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இந்த காட்சியைக் கொண்டு காவல்துறையினர் கடத்தப்பட்ட குழந்தையை தேடி வருகின்றனர்.