தமிழ்நாடு

காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

Rasus

சென்னை வில்லிவாக்கம் பாரதிநகரில் நேற்றிரவு காணாமல் போன 3 வயது பெண் குழந்தை, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன் - ஜெயந்தி. இவர்களின் 3 வயது மகள் காவ்யா. நேற்றிரவு மழை பெய்ததால், குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தாய் ஜெயந்தி அருகிலுள்ள கடைக்குச் பொருட்கள் வாங்க சென்றிருக்கிறார். பின் கடையிலிருந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டில் குழந்தை இல்லை. இதனால் பதறிப்போன ஜெயந்தி, வீடு முழுக்க குழந்தையை தேடிவிட்டு உறவினர்கள் உதவியுடன் அக்கம்பக்கத்திலும் தேடியிருக்கிறார். அப்படியிருந்தும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வில்லிவாக்கம் காவல்துறையில் ஜெயந்தி புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினரும் குழந்தையை தேடி வந்துள்ளனர்.

இந்தநிலையில், இன்று காலை வீட்டின் பின்புறமுள்ள குப்பைமேட்டிலிருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. பின்பு அது ஜெயந்தியின் மகள் காவ்யா என்று கண்டறியப்பட்டது. குழந்தை மீட்கப்பட்ட போது குழந்தையின் வாயில் நுரைத்தள்ளியடி இருந்திருக்கிறது. இதனால் குழந்தையை யாரேனும் கொலை செய்தார்களா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.