தமிழ்நாடு

ஸ்டான்லி மருத்துவமனையில் குழந்தை மாயம்

ஸ்டான்லி மருத்துவமனையில் குழந்தை மாயம்

Rasus

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூன்றரை வயதுக் குழந்தை காணாமல் போயுள்ளது. அந்தக் குழந்தை கடத்தப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடுங்கையூரைச் சேர்ந்தவர் பர்கத்துல்லா. இவரது மூன்றரை வயது மகன் முகமது ஆசிப். இச்சிறுவனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, புறநோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டு வாங்குவதற்காக, குழந்தையுடன் வரிசையில் நின்றனர். அப்போது திடீரென, முகமது ஆசிப்பை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட, பெற்றோர் அவனைத் தேடினர். எங்கு தேடியும் காணவில்லை என்பதால், போலீசில் புகார் அளித்தனர். மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர். அரசு மருத்துவமனையில் குழந்தை காணாமல் போயுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.