தமிழ்நாடு

மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு : பெற்றோர் கண் முன்னே பரிதாபம்

மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு : பெற்றோர் கண் முன்னே பரிதாபம்

webteam

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ரா மற்றும் ஒரே.மகன் அபிமன்யு. கோபால் இன்று தனது மகன் மற்றும் மனைவியுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் அவர் சென்றபோது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல், மோட்டார் சைக்களின் முன்பகுதியில் இருந்த அபிமன்யு கழுத்தில் வெட்டியுள்ளது. 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் குழந்தையை  சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சென்றனர். அங்கு குழந்தை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 மாஞ்சா நூலால் வடசென்னை பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்புகளை தொடர்ந்து, தமிழக அரசு காத்தாடி மற்றும் மாஞ்சா நூலுக்கு தடை விதித்தது. ஆனால் மாஞ்சா நூல் தடை செய்யப்பட்ட பிறகும், மாஞ்சா நூலால் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.