தமிழ்நாடு

மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி

மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி

webteam

விருதுநகரில் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் ‌உயிரிழந்தான். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் ருத்ரன் (3). இந்த சிறுவன் அம்பத்தூர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தான். இன்று காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்‌டிருந்த சிறுவனை காணாத நிலையில், குடும்பத்தினர் சிறுவனை தேடி வந்தனர். 

அப்பொழுது வீட்டின் அருகே உள்ள சுமார் 4 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் சிறுவன் ருத்ரன் விழுந்து கிடந்தது தெரியவந்தது. உடனே சிறுவனை மீட்டு ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுவன் ருத்ரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.