காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்ணீர் எடுத்தபோது கிணற்றில் தவறி விழுந்ததில் 3 பேர் பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூர்ய பிள்ளையார்குப்பம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மழை மற்றும் காற்று பலமாக வீசியதால் மின் ஒயர்கள் அறுந்து விழுந்து மின்சாரம் தடைபட்டது. இதனால் கிராம மக்கள் குடி தண்ணீர் எடுக்க கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் உள்ள குடிநீர் பொது கிணற்றை நாடினர். கிணற்றின் மேல் அமைக்கப்பட்டு இருந்த சிமெண்ட் சிலாப்மேல் ஏறி நின்று வாலி கொண்டு தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது சிமெண்ட் சிலாப் யாரும் எதிர்பாராதவிதமாக உடைந்து எட்டு பேரும் கிணற்றில் விழுந்தனர்.
Read Also -> புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்
இதனையறிந்த அப்பகுதியினர் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த 5 பெண்களை பத்திரமாக மீட்டனர். இதில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 3 பேரின் உடல்களையும் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.