தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

webteam

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் திண்டுக்கல் அருகே பறிமுதல் செய்யப்பட்டன.

50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறி, பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. 

இந்நிலையில் திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக பயன்பாட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை திண்டுக்கல்லைஅடுத்துள்ள மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து நேற்று சுகாதார ஆய்வாளர்கள் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ 5 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட மூன்று டன் பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி லாரியில் ஏற்றப்பட்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.