தமிழ்நாடு

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஊழியர்கள் மூவர் கைது

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஊழியர்கள் மூவர் கைது

webteam

தஞ்சையில் அரசுப் பேருந்தின் முகப்புவிளக்கை உடைத்த ஓட்டுநர், நடத்துநர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கடந்த 4-ஆம் தேதி முதல் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4-ஆம் தேதி இரவு 9 மணியளவில் தஞ்சை பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதி சென்ற அரசுப் பேருந்தின் முகப்புவிளக்கை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துவிட்டதாக புகார் பதிவாகியது. 

சம்பவம் நடைபெற்ற கோடியம்மன்கோயில் பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை தஞ்சை மேற்கு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஓட்டுநர் செல்வக்குமார், நடத்துநர் வீரமணி, வினோத் ஆகியோர் பேருந்தின் முகப்பு விளக்கை உடைத்தது தெரியவந்தது. அதனையடுத்து, மூவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர்.