தமிழ்நாடு

சென்னை: புழல் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

Veeramani

சென்னையில் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் விட்டு, விட்டுமழை பெய்து வருகிறது. இதனால், நீர்ஆதாரங்களும் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியும் முழு கொள்ளளவை எட்டி, கடல்போல காட்சியளிக்கிறது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருதி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

21.20 அடி கொண்ட புழல் ஏரியில் தற்போது 21.19 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் இருந்தும் விநாடிக்கு 1,350 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.