கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில் கேரளாவில் பருவமழை தீவிரமடையும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வால்பாறை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, நெல்லை ஆகிய இடங்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என தெரிவித்துள்ள பிரதீப் ஜான், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி நாமக்கல் மாவடம் பரமத்தி வேலூர் நீலகிரி மாவட்டம் குன்னூர், ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.